Connect with us
Friday, April 17, 2026

இன்று தொடங்கும் ஏழரை சனி: எந்த ராசிகள் பாதிப்பு? சனி தோஷத்தை குறைக்கும் பரிகாரங்கள் என்ன?

இன்று தொடங்கும் ஏழரை சனி

வாக்கிய பஞ்சாங்கத்தின் படி மார்ச் 6 ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த முக்கியமான கிரக மாற்றம் காரணமாக சில ராசிகளுக்கு ஏழரை சனி, அஷ்டம சனி மற்றும் அர்த்தாஷ்டம சனி போன்ற காலங்கள் தொடங்குகின்றன என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். இதனால் எந்த ராசிக்காரர்கள் பாதிக்கப்படுகிறார்கள், அவர்கள் என்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.

இந்த சனிப்பெயர்ச்சியால் கும்பம், மீனம் மற்றும் மேஷம் ஆகிய மூன்று ராசிகளுக்கு ஏழரை சனி தொடங்குகிறது. கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் இறுதி கட்டமான பாத சனி தொடங்குகிறது. மீன ராசிக்காரர்களுக்கு இரண்டாவது கட்டமான ஜென்ம சனி ஆரம்பமாகிறது. அதேபோல் மேஷ ராசிக்காரர்களுக்கு முதல் கட்டமான விரய சனி தொடங்குகிறது.

சிம்ம ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனியும், தனுசு ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனியும் ஆரம்பமாகிறது. இந்த காலகட்டம் சில சவால்களையும் சோதனைகளையும் தரக்கூடும் என்பதால், பரிகாரங்கள் செய்து சனி பகவானின் அருளைப் பெறுவது நல்லது என்று ஜோதிடர்கள் பரிந்துரைக்கின்றனர்.

புதன் வக்ர பெயர்ச்சி 2026: பிப்ரவரியில் இந்த 4 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் யோகம்!புதன் வக்ர பெயர்ச்சி 2026: பிப்ரவரியில் இந்த 4 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் யோகம்!

சனி பகவான் கர்ம காரகனாகவும் நீதியின் அடையாளமாகவும் கருதப்படுகிறார். மனிதர்கள் செய்யும் செயல்களின் அடிப்படையில் அவர்களுக்கு பலன்களை வழங்குபவர் சனி என்று மதநம்பிக்கைகள் கூறுகின்றன. நல்ல செயல்கள், தர்மம் மற்றும் பக்தி வழிபாடுகள் மூலம் சனி பகவானின் அருளைப் பெற முடியும் என்றும் நம்பப்படுகிறது.

ஏழரை சனி

சனியின் பாதிப்பை குறைக்க கோவிலுக்கு சென்று சனி பகவானை வழிபடுவது சிறந்த பரிகாரமாக கருதப்படுகிறது. மேலும் ஒவ்வொரு சனிக்கிழமையும் அருகிலுள்ள சிவன் கோவிலில் உள்ள சனி பகவான் சன்னதியில் நல்லெண்ணெய் அல்லது எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.

மகர ராசியில் உருவான இரட்டை ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம் ஆரம்பம்மகர ராசியில் உருவான இரட்டை ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம் ஆரம்பம்

அதேபோல் சனி பகவானின் பிடியிலிருந்து விடுபட அனுமன் வழிபாடு மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. சனிக்கிழமைகளில் அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவிப்பது சிறப்பு வழிபாடாகக் கூறப்படுகிறது. தேய்பிறை அஷ்டமி நாட்களில் கால பைரவரை வழிபடுவது விபத்து மற்றும் மரண பயம் போன்றவற்றை குறைக்கும் என்று நம்பப்படுகிறது.

சனி பகவானை மகிழ்விக்க ஏழைகளுக்கு உதவுவது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. சனிக்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகள் அல்லது ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்யலாம். குறிப்பாக தயிர் சாதம் வழங்குவது நல்லதாகக் கருதப்படுகிறது. ஏழைகளுக்கு ஆடைகள், போர்வைகள் அல்லது குடை போன்றவற்றை தானமாக வழங்கலாம்.

மேலும் இரும்பு பொருட்கள் அல்லது இரும்பு பாத்திரங்கள் போன்றவற்றை தானமாக வழங்குவது சனியின் தாக்கத்தை குறைக்கும் என்று நம்பப்படுகிறது. ஏழை மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் வாங்கி கொடுப்பதும் நல்ல தர்மமாக கருதப்படுகிறது.

மீனத்தில் வக்ரமாகும் சனி பகவான்: 138 நாட்கள் ஐந்து ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை, கஷ்டங்கள் தீரும் காலம்மீனத்தில் வக்ரமாகும் சனி பகவான்: 138 நாட்கள் ஐந்து ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை, கஷ்டங்கள் தீரும் காலம்

சனிப்பெயர்ச்சி காலத்தில் தினமும் குளித்து முடித்து “நீலாஞ்சன சமாபாஸம், ரவிபுத்ரம் யமாக்ரஜம், சாயா மார்த்தாண்ட ஸம்பூதம், தம் நமாமி ஸனைச்சரம்” என்ற சனி மந்திரத்தை ஒன்பது முறை சொல்லுவது நல்லது என்று கூறப்படுகிறது.

இந்த காலத்தில் நேர்மையாக வாழ்வது மிகவும் முக்கியம். யாரையும் ஏமாற்றாமல் நடந்து கொள்ள வேண்டும். மது மற்றும் அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது என்று கூறப்படுகிறது. பெரியவர்கள் மற்றும் உழைக்கும் மக்களை மதித்து நடந்து கொண்டால் சனி பகவானின் அருள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

போதைப்பழக்கங்களை தவிர்த்து மனதின் தூய்மையுடன் இறைவனை வழிபட்டால் இந்த சவாலான காலத்தையும் எளிதாக கடக்க முடியும் என்று ஜோதிட நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன.

மீன ராசியில் சனி பகவான் உதயம்… இந்த ராசிகளின் தலையெழுத்தே மாறப்போகுது.! உங்க ராசி என்ன?மீன ராசியில் சனி பகவான் உதயம்… இந்த ராசிகளின் தலையெழுத்தே மாறப்போகுது.! உங்க ராசி என்ன?

To Top