சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி
வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் அரசனாக போற்றப்படும் சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாக விளங்குகிறார். தலைமைத்துவம், தைரியம், ஆற்றல், மரியாதை, தன்னம்பிக்கை, மகிழ்ச்சி போன்ற பல அம்சங்களை சூரியன் குறிக்கின்றார். மாதம் ஒருமுறை ராசி மாற்றம் செய்வதோடு, சில நேரங்களில் நட்சத்திர மாற்றத்தையும் சூரியன் மேற்கொள்வார்.
சூரியனின் இந்த நிலை மாற்றங்கள் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், வரும் பிப்ரவரி 06 ஆம் தேதி சூரியன் தனது நட்சத்திரத்தை மாற்றி விசாகம் நட்சத்திரத்திற்கு செல்ல உள்ளார். விசாகம் நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய் என்பதால், இந்த நட்சத்திர பெயர்ச்சியானது சக்திவாய்ந்த மாற்றங்களை உருவாக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
செவ்வாயின் நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால், அனைத்து ராசிகளுக்கும் பலன்கள் கிடைத்தாலும், குறிப்பாக சில ராசிகளுக்கு நிதி மற்றும் தொழில் ரீதியாக மிகச் சிறப்பான முன்னேற்றம் காணப்படும். இந்த நட்சத்திர பெயர்ச்சியால் பிப்ரவரி மாதத்தில் நல்ல அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகும் ராசிகள் இவை.
சிம்ம ராசி
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் சாதகமாக அமையும். தைரியமும், மன உறுதியும் அதிகரிக்கும். நீண்ட காலமாக இழுத்துச் சென்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு மன அமைதி பெறுவீர்கள். நிதி நிலைமை மேம்பட்டு, முதலீடுகளில் எதிர்பாராத லாபங்கள் கிடைக்கும். முக்கிய முடிவுகளை எடுக்கும் தருணங்கள் உருவாகி, அவை வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகளும் உருவாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் காலமாக இது இருக்கும்.
கும்ப ராசி
கும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி அதிகரிக்கும். தன்னம்பிக்கை உயரும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும் வாய்ப்பு உள்ளது. திருமணமானவர்கள் குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமான தருணங்களை அனுபவிப்பார்கள். வருமானத்தில் உயர்வு ஏற்பட்டு, புதிய வருமான ஆதாரங்களும் உருவாகும். வீடு அல்லது வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அதற்கான சூழ்நிலைகள் இக்காலத்தில் சாதகமாக அமையும்.
மேஷ ராசி
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திர பெயர்ச்சி நேர்மறையான மாற்றங்களை கொண்டு வரும். பல்வேறு வழிகளில் இருந்து பணவரவு அதிகரிக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். நிதி நிலைமை வலுவடையும். பேச்சாற்றல் மூலம் பல வேலைகளை சுலபமாக முடிப்பீர்கள். புத்திசாலித்தனமாகவும், நிதானமாகவும் செயல்பட்டால் நல்ல நிதி நன்மைகளைப் பெறலாம். குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பொறுப்புத் துறப்பு: மேலே வழங்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் ஜோதிட அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இதன் நம்பகத்தன்மைக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இது தகவல் நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் சம்பந்தப்பட்ட ஜோதிட நிபுணர்களின் ஆலோசனையை பெறுவது நல்லது.
மேலும் செய்திகள்





