ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாகக் கருதப்படுபவர் சூரியன். மரியாதை, கௌரவம், அதிகாரம் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றின் காரகனாக விளங்கும் சூரியன், சிம்ம ராசியின் அதிபதியும் ஆவார். பொதுவாக சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அதே நேரத்தில் சில நேரங்களில் நட்சத்திர மாற்றங்களும் நிகழும். சூரியனின் இந்த நிலை மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே ஜோதிட நம்பிக்கை.
அந்த வகையில், பிப்ரவரி மாதத்தில் சூரியன் மூன்று முறை தனது நிலையை மாற்றவுள்ளார். முதலில் பிப்ரவரி 6ஆம் தேதி அவிட்டம் நட்சத்திரத்திற்கு சூரியன் செல்லவுள்ளார். அதன் பின்னர் பிப்ரவரி 13ஆம் தேதி மகர ராசியில் இருந்து வெளியேறி கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார். இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 19ஆம் தேதி சூரியன் சதயம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைகிறார்.
இப்படி ஒரே மாதத்தில் மூன்று முறை நடைபெறும் சூரியனின் இந்த மாற்றங்கள் அனைத்து ராசிகளின் வாழ்விலும் மாற்றங்களை உருவாக்கும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு இது மிகுந்த அதிர்ஷ்டத்தை அளிக்கக்கூடும். தொழில், பணம் மற்றும் சமூக அந்தஸ்து தொடர்பான விஷயங்களில் பெரிய முன்னேற்றம் காணப்படும் வாய்ப்பு உள்ளது. அந்த வகையில், பிப்ரவரியில் நடைபெறும் இந்த 3 சூரிய பெயர்ச்சிகளால் நல்ல பலன்களைப் பெறப்போகும் மூன்று ராசிகள் குறித்து பார்க்கலாம்.
தனுசு ராசி
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வணிகத்தில் ஈடுபடுபவர்கள் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைப் பெறலாம். அரசு பணியில் இருப்பவர்களுக்கு சாதகமான மாற்றங்கள் ஏற்படும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் கிடைக்கலாம். நீண்ட நாட்களாக நினைத்த ஆசைகள் நிறைவேறும் காலமாக இது அமையும்.
சிம்ம ராசி
சிம்ம ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் முழுவதும் சூரிய பெயர்ச்சிகள் மிகுந்த அதிர்ஷ்டத்தை வழங்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. காதல் வாழ்க்கை இனிமையாக அமையும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல துணையை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கலாம். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்புகளும் உருவாகும். திட்டமிட்டு செய்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும்.
மேஷ ராசி
மேஷ ராசிக்காரர்களுக்கும் இந்த சூரிய பெயர்ச்சிகள் சாதகமான பலன்களைத் தரும். வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய வருமான ஆதாரங்கள் மூலம் நிதி நிலை வலுப்பெறும். தொழில் ரீதியாக உயர்வு ஏற்படும். தலைமைத்துவ திறன்கள் மேம்பட்டு, மற்றவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்பும் அதிகம்.
மேலே வழங்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் ஜோதிட அனுமானங்கள் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் பலன்கள் நபருக்கு நபர் மாறுபடலாம். இந்த தகவல் முழுக்க தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது. எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் சம்பந்தப்பட்ட ஜோதிட நிபுணரை அணுகுவது நல்லது.


