நியூமராலஜி – எண் கணிதம் – ஜோதிடத்தின் ஒரு சிறப்பான கிளையாகக் கருதப்படுகிறது. இதன்மூலம் ஒருவரின் ஆளுமை, எதிர்காலம், வாழ்க்கைப் பாதை உள்ளிட்ட பல அம்சங்களை அவரது பிறந்த தேதியின் அடிப்படையில் புரிந்துகொள்ள முடியும். இதில் 1 முதல் 9 வரையான விதி எண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்தை அதிபதியாகக் கொண்டு, அதன் ஆற்றல்களையும் பண்புகளையும் மனிதர்களின் வாழ்க்கையில் பிரதிபலிக்கிறது.
உதாரணமாக, ஒருவர் ஒரு மாதத்தின் 25 ஆம் தேதி பிறந்திருந்தால், அவரது விதி எண் 2 + 5 = 7 ஆகும். அதேபோல், 5, 14 அல்லது 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 5 ஆகும். இந்த எண்ணின் அதிபதி புதன் – புத்திசாலித்தனம், பேச்சுவன்மை, படிப்பு மற்றும் வியாபாரத்தின் காரக கிரகம்.
நியூமராலஜி படி, விதி எண் 5 கொண்டவர்கள் பணம் சம்பாதிப்பதில் உண்மையான கில்லாடிகள் எனப் போற்றப்படுகின்றனர். இவர்கள் எந்த வேலையிலும் ரிஸ்க் எடுக்கத் தயங்குவதில்லை. வேகமாகவும், சரியான முடிவுகளை எடுக்கும் திறன் பெற்றவர்கள். தைரியமும், புத்திசாலித்தனமும் இவர்களின் வெற்றிக்கு மூலகாரணம்.
இவர்களின் மனம் கூர்மையானது; ஒவ்வொரு திட்டத்தையும் திட்டமிட்டு, பகுத்தறிவுடன் செயல்படுவார்கள். இது அவர்களுக்குத் தொழில் அல்லது வேலை என எதிலும் நிதிப் பலன்களை வழங்குகிறது. பணப்பற்றாக்குறை இவர்களுக்கு அரிதானது.
இவர்கள் இயற்கையாகவே பயண விரும்பிகள்; ஒரே இடத்தில் நிலையாக இருக்க முடியாதவர்கள். மற்றவர்களுடன் எளிதில் இணைந்து பணியாற்றும் திறன் பெற்றவர்கள். அவர்களின் சிறந்த பேச்சுத்திறன் தான், கடினமான சூழ்நிலைகளைக்கூட எளிதாக்கி, வெற்றிப் பாதையில் நடத்துகிறது. இந்தத் திறன் மூலம் அவர்கள் எங்கும் மதிக்கப்படுகிறார்கள்; நிதிப் பாதையும் வலுப்படுகிறது.
(இந்தத் தகவல் இணையத்தில் கிடைக்கும் பொதுவான நியூமராலஜி கருத்துகள் மற்றும் அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டது மட்டுமே. துல்லியத்திற்கோ நம்பகத்தன்மைக்கோ உத்தரவாதம் இல்லை. இது பொழுதுபோக்கு/தகவல் நோக்கத்திற்காக மட்டுமே. எந்த முக்கிய முடிவையும் எடுக்கும் முன், தொடர்புடைய நிபுணரைக் கலந்தாலோசிக்கவும்.)


