2026-இல் பூமிக்கு பேரழிவு அச்சுறுத்தலா? – அதிர வைத்த பாபா வங்காவின் கணிப்புகள்

பாபா வங்காவின் கணிப்புகள்

சமீபகாலமாக உலகம் முழுவதும் இயற்கை பேரழிவுகள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. பல நாடுகளில் வெள்ளம், நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கைகள் மற்றும் தீவிர காலநிலை மாற்றங்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன. இந்த சூழலில், புகழ்பெற்ற பல்கேரிய தெய்வீக திருஷ்டாந்தியான பாபா வங்கா (Baba Vanga) வழங்கிய 2026 ஆம் ஆண்டு குறித்த கணிப்புகள் மீண்டும் உலகளாவிய கவனத்தை ஈர்த்து வருகின்றன.

அவரது கணிப்புகளின்படி, 2026 ஆம் ஆண்டு பூமிக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமையக்கூடும். அதில் குறிப்பாக, பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள் மற்றும் வரலாறு காணாத காலநிலை மாற்றங்கள் ஆகியவை முக்கிய இடத்தை வகிக்கின்றன.

பாபா வங்கா கூற்றுப்படி, இந்த பேரழிவு நிகழ்வுகள் பூமியின் நிலப்பரப்பில் 7% முதல் 8% வரை அளவில் அழிவை ஏற்படுத்தக்கூடும். இது சூழலியல் அமைப்புகள், முக்கிய உள்கட்டமைப்புகள் மற்றும் மக்கள் வாழ்வாதாரத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், வரலாற்றில் இல்லாத வெள்ளங்கள், தீவிர வறட்சிகள் மற்றும் முன்னறிய முடியாத காலநிலை சீற்றங்கள் போன்றவற்றையும் அவர் எச்சரித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த கணிப்புகள் இயற்கை எச்சரிக்கைகளாக பலரால் கருதப்படுவதுடன், அறிவியல் சமூகம் இது போன்ற கணிப்புகளை உறுதியாக ஏற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும், தற்போதைய காலநிலை மாற்றத் தாக்கங்கள் காரணமாக இந்த கணிப்புகள் பொதுமக்களிடையே ஆழமான பயத்தையும் விவாதத்தையும் உருவாக்கியுள்ளன.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net