Tuesday, July 22, 2025

Top 5 This Week

Related Posts

சோபிதா வந்த நேரம்.. மகனுக்கு வெற்றி.. மருமகளுக்கு ஐஸ் வைத்த நாகார்ஜுனா!

நடிகை சமந்தாவை விவாகரத்து செய்து பிரிந்ததில் இருந்தே நாக சைத்தன்யா தொடர்ந்து தோல்வியை தழுவி வருகிறார். இதனையடுத்து, சோபிதாவை திருமணம் செய்த பின்னர் நாக சைதன்யா நடிப்பில் வெளியான தண்டேல் திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகர் நாகார்ஜுனா இந்த வெற்றிக்கு காரணம் மருமகள் சோபிதா துலிபாலா வந்த நேரம் என்று பேசினார்.

சோபிதா

சந்து மொண்டட்டி இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி, கருணாகரன், ஆடுகளம் நரேன், பப்லு பிரித்விராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிப்ரவரி 7ம் தேதி தண்டேல் வெளியானது.

பாகிஸ்தான் போலீஸாரிடம் சிக்கிக் கொள்ளும் மீனவரான நாக சைதன்யாவை மீட்க சாய் பல்லவி நடத்தும் போராட்டம் தான் இந்த தண்டேல் படம்.

காதல் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் மற்றும் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்த நிலையில், 50 கோடி வசூலை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூத்த மருமகள் சமந்தா இருக்கும் போது அவருக்கு சப்போர்ட்டாக பேசி வந்த நடிகர் நாகார்ஜுனா தற்போது மருமகள் சோபிதா பக்கம் சாய்ந்து உள்ளார்.

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here

Popular Articles