Tuesday, July 22, 2025

Top 5 This Week

Related Posts

பாலிவுட் நடிகர் சயிஃப் அலி கான் கத்திக்குத்து – மற்றுமொருவர் கைது

பிரபல பாலிவுட் நடிகர் சயிஃப் அலி கான் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபரை, சத்திஸ்கர் மாநிலக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

54 வயதுடைய சயிஃப் அலி அடையாளம் தெரியாத நபர், கடந்த வியாழக்கிழமை (16 ஜனவரி) அதிகாலை அவரது வீட்டில் வைத்து 6 முறை கத்தியால் குத்தினார்.

இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று நம்பப்படும் இரண்டாவது சந்தேக நபர் ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்ததாக மும்பை காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து, குறித்த நபர் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here

Popular Articles