Wednesday, July 23, 2025

Top 5 This Week

Related Posts

நியூ ஆர்லியன்ஸ் வாகனத் தாக்குதலில் பிரிட்டன் பிரஜையும் கொல்லப்பட்டார்

புத்தாண்டு தினத்தன்று நியூ ஆர்லியன்ஸில் (New Orleans) மேற்கொள்ளப்பட்ட வாகனத் தாக்குதலில் கொல்லப்பட்ட 14 பேரில் ஒரு பிரிட்டிஷ் பிரஜை (British national) அடங்குவதாக வெளியுறவு அலுவலகம் (Foreign Office) உறுதிப்படுத்தியுள்ளது.

அவர் லண்டனில் உள்ள செல்சியாவைச் சேர்ந்த (Edward Pettifer) எட்வர்ட் பெட்டிஃபர், 31, என பெருநகர காவல்துறை பெயரிட்டுள்ளது.

வெளிநாட்டு பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகம் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ஆதரவளிப்பதாக ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

தாக்குதலின் போது, ​​நகரின் போர்பன் தெருவில் பிக்-அப் டிரக்கில் இருந்த ஒருவர் பொலிஸாரால் கொல்லப்படுவதற்கு முன்பு கூட்டத்தினரை மோதி தள்ளினார்.

இது தொடர்பில் பெட்டிஃபரின் குடும்பம் கூறுகையில்,

“நியூ ஆர்லியன்ஸில் எட் இறந்த சோகச் செய்தியால் முழு குடும்பமும் பேரழிவிற்கு ஆளாகியுள்ளது. அவர் ஒரு அற்புதமான மகன், சகோதரர், பேரன், மருமகன் மற்றும் பலருக்கு நண்பராக இருந்தார். இந்த கொடூரமான தாக்குதலால் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்த மற்ற குடும்பங்களுடன் எங்கள் எண்ணங்கள் உள்ளன” என்று கூறியுள்ளனர்.

நன்கு அறியப்பட்ட அமெரிக்க கல்லூரி கால்பந்து வீரர், இளம் செவிலியர் மற்றும் நான்கு வயது குழந்தையின் தாய் ஆகியோரும் இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களில் உள்ளனர்.

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here

Popular Articles