Tuesday, July 22, 2025

Top 5 This Week

Related Posts

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விடாமுயற்சி: அசத்தும் அஜித்

விடாமுயற்சி

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் விடாமுயற்சி. அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜூன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொள்கிறார்.

கடந்த மாதம் யாரும் எதிர்பாராத நேரத்தில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த நிலையில், இன்னும் 7 நாட்களுக்கான படப்பிடிப்பு பணிகள் மீதி இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்பு பாங்காக்கில் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் படக்குழு சில புகைப்படங்களை இணையத்தில் பதிவுட்டுள்ளனர்.

அதில் அஜித் மிகவும் ஸ்டைலாக டக்சிடோ கோட் சூட் அணிந்து நடந்து வருகிறார். மற்றொரு புகைப்படத்தில் இயக்குனர் மகிழ் திருமேனி, அஜித், திரிஷா, ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் இருக்கின்றனர்.

இந்த புகைப்படம் இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது. திரைப்படம் கண்டிப்பாக பொங்கலுக்கு வெளியாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here

Popular Articles