உடற்பயிற்சிக் கூடத்தில் தீவிரப் பயிற்சியில் ஈடுபடும் நடிகை யாஷிகா ஆனந்த்

நடிகை யாஷிகா ஆனந்த் உடற்பயிற்சிக் கூடத்தில் தீவிரப் பயிற்சியில் ஈடுபடும் சமீபத்திய புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில், அவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


உடற்பயிற்சிக் கூடத்தில் தீவிரப் பயிற்சியில் ஈடுபடும் நடிகை யாஷிகா ஆனந்த்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான யாஷிகா ஆனந்த், உடற்பயிற்சிக் கூடத்தில் தீவிர உடற்பயிற்சிகளில் ஈடுபடும் சமீபத்திய புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில், அவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

திரைப்படத் துறைக்கு வருவதற்கு முன்னர் மாடலிங் துறையில் பணியாற்றிய யாஷிகா ஆனந்த், 'துருவங்கள் பதினாறு' திரைப்படத்தின் ஊடாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து வெளியான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார்.

பின்னர் நோட்டா, ஜாம்பி, பெஸ்ட்டீ மற்றும் கடமையை செய் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். இதில் பெரும்பாலான திரைப்படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் தோன்றி ரசிகர்களைக் கவர்ந்த யாஷிகா, தமிழ் சினிமாவைத் தொடர்ந்து தெலுங்குத் திரையுலகிலும் கால்பதித்து அங்கும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

தமிழில் 'டிஎன் 2026' (TN 2026) திரைப்படத்தில் நடித்திருந்த அவர், அதன் பின்னர் புதிய திரைப்படங்கள் எதிலும் ஒப்பந்தமாகாமல் உள்ளார். படப்பிடிப்புகள் இல்லாத இந்த ஓய்வு நேரத்தில் நண்பர்களுடன் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்று மகிழ்வதுடன், சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாகப் புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார். அதன் ஒரு பகுதியாகவே தற்போது அவர் வெளியிட்டுள்ள உடற்பயிற்சிப் புகைப்படங்கள் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Colombo Tamil WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Colombo Tamil-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க