வனிதா விஜயகுமாரின் காதல் உறவில் விரிசலா? இன்ஸ்டாகிராம் பதிவால் ரசிகர்கள் மத்தியில் கேள்வி

நடிகையும் இயக்குநருமான வனிதா விஜயகுமார் காதல், திருமணம் மற்றும் உறவுகளில் உண்மையாக இருப்பதன் முக்கியத்துவம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து, அவர் காதல் தோல்வியைச் சந்தித்துள்ளாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


வனிதா விஜயகுமாரின் காதல் உறவில் விரிசலா? இன்ஸ்டாகிராம் பதிவால் ரசிகர்கள் மத்தியில் கேள்வி

நடிகையும் இயக்குநருமான வனிதா விஜயகுமார் காதல் மற்றும் திருமண உறவுகள் தொடர்பில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக வாழ்க்கை மற்றும் மனவேதனை தொடர்பான பதிவுகளை வனிதா விஜயகுமார் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றார்.

இந்நிலையில், நேற்று (27) காதல் உறவுகளில் உண்மையாக இருப்பதன் அவசியம் குறித்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவொன்றைப் பகிர்ந்துள்ளார்.

திருமணம் செய்துகொள்ளும் நோக்கத்துடன் காதலிக்க வேண்டும் என்றும், மற்றொருவரின் இதயம் விளையாட்டு மைதானம் அல்ல என்றும் அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

காதல் என்பது சாதாரணமான விடயமல்ல எனவும், அது அர்ப்பணிப்பும் நீடித்த உறுதிப்பாடும் கொண்ட உறவு எனவும் தெரிவித்துள்ள அவர், அதற்குத் தயாராக இல்லாதவர்கள் மற்றவர்களின் நேரத்தை வீணடிக்கக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் காயப்படுத்த வேண்டாம் என்றும், உண்மையாக இருக்க முடிந்தால் மாத்திரமே காதலிக்க வேண்டும் என்றும் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

வனிதா விஜயகுமாரின் இந்தப் பதிவைத் தொடர்ந்து, அவர் அண்மையில் காதல் தோல்வியைச் சந்தித்திருக்கலாம் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

முன்னதாகவும் இந்த ஆண்டு தனது வாழ்க்கையில் ஏன் இவ்வாறு அமைந்துள்ளது எனக் கேள்வி எழுப்பியிருந்த வனிதா, தனது வாழ்க்கைப் பாதை குறித்து ஆதங்கத்தை வெளிப்படுத்தும் காணொளியொன்றையும் பகிர்ந்திருந்தார்.

இதற்கிடையில், கோவாவுக்குச் சென்றுள்ள வனிதா விஜயகுமார் அங்கு பதிவு செய்யப்பட்ட காணொளியொன்றையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

அவரது அண்மைய பதிவுகளைப் பார்த்த ரசிகர்கள் பலரும் ஆறுதலான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

வனிதா விஜயகுமாரின் முந்தைய திருமண உறவுகள் பிரிவில் முடிவடைந்திருந்த நிலையில், அவரது தற்போதைய பதிவுகள் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளன.

எனினும், புதிய காதல் உறவில் இருந்ததாகவோ அல்லது காதல் பிரிவைச் சந்தித்துள்ளதாகவோ வனிதா விஜயகுமார் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இதனால் ரசிகர்களின் கருத்துக்கள் உறுதிப்படுத்தப்படாத ஊகங்களாகவே உள்ளன.

திரைத்துறையைப் பொறுத்தவரையில், ‘மிஸஸ் அன்ட் மிஸ்டர்’ திரைப்படத்தைத் தொடர்ந்து வனிதா விஜயகுமார் தனது அடுத்த திரைப்படம் தொடர்பான அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Colombo Tamil WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Colombo Tamil-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க