தேனிசைத் தென்றல் தேவாவின் மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் கட்டணம் பெற மறுப்பு... நெகிழ்ச்சி சம்பவம்

மறைந்த இசையமைப்பாளர் தேவாவுக்கான மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் கட்டணங்களை வசூலிக்க மறுத்த நெகிழ்ச்சியான தருணத்தை அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவா பகிர்ந்துள்ளார்.


தேனிசைத் தென்றல் தேவாவின் மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் கட்டணம் பெற மறுப்பு... நெகிழ்ச்சி சம்பவம்

தமிழ் சினிமாவில் 400 க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து 'தேனிசைத் தென்றல்' என்று அழைக்கப்படும் பிரபல இசையமைப்பாளர் தேவா, சமீபத்தில் மாரடைப்பு காரணமாக காலமானார்.

அவரது மறைவு தமிழ் சினிமா உலகையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்திய நிலையில், அவரது மகனும் இசையமைப்பாளருமான ஸ்ரீகாந்த் தேவா ஊடகம் ஒன்றுக்குப் அளித்த பேட்டியில் ஒரு நெகிழ்ச்சியான தகவலைப் பகிர்ந்துள்ளார்.

அப்பா தேவா அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம் என்றும், அங்கே மருத்துவர்கள் அவருக்கு அவசர சிகிச்சை மற்றும் சி.பி.ஆர் அளித்தும் பலனளிக்கவில்லை என்றும் ஸ்ரீகாந்த் தேவா குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவமனைக்கு வந்தடைந்ததும் சிகிச்சைக் கட்டணம் எவ்வளவு என்று கேட்டபோது, மருத்துவமனை தரப்பில் இருந்து 'பணம் எதுவும் வேண்டாம் சார், அவர் ஒரு பெரிய லெஜன்ட், முடிந்தால் ஆம்புலன்ஸுக்கு மட்டும் பணம் கொடுங்கள்' என்று கூறியதாக அவர் தெரிவித்தார்.

மேலும், ஆம்புலன்ஸிற்கான கட்டணத்தைக் கொடுக்க முயன்றபோது, ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் அதனைப் பெற மறுத்துவிட்டதாக ஸ்ரீகாந்த் தேவா உணர்ச்சிப்பூர்வமாகக் குறிப்பிட்டுள்ளார்.

'தேவா சார் பாடல்களைக் கேட்டுத்தான் நாங்கள் வண்டி ஓட்டுகிறோம், அவருக்கு நாங்கள் பணம் வாங்க வேண்டுமா? வேண்டாம் சார்' என்று கூறி ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணம் பெற மறுத்தது தங்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இசை உலகிற்கும் தமிழ் மக்களுக்கும் தேவாா ஆற்றிய தொண்டுக்குக் கிடைத்த உண்மையான மரியாதையாக இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Colombo Tamil WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Colombo Tamil-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க