வேத ஜோதிடத்தில், ஒவ்வொரு கிரகமும் தனது ராசி மாற்றத்தின் மூலம் மனித வாழ்க்கையில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் மற்றும் செழிப்பு ஆகியவற்றுக்கு அதிபதியான சுக்கிரன், செப்டம்பர் 02, 2026 அன்று தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் நுழைகிறார். இந்த பெயர்ச்சியானது மிகவும் சக்திவாய்ந்த மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குகிறது.
இந்த சுக்கிர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களின் நிதி நிலை உயர்வதோடு, தொழிலில் உச்சத்தை அடையவும், ஆடம்பரமான வாழ்க்கை வாழவும் வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில், மிகவும் சாதகமான பலன்களைப் பெறும் ராசிகள் வருமாறு:
சிம்மம்: சுக்கிரன் சிம்ம ராசியின் 3-ஆம் வீட்டிற்குச் செல்கிறார். இதனால், சமூகத்தில் உயர் அந்தஸ்தில் உள்ள புதிய நபர்களுடன் நட்பு கிடைக்கும். ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கும். வேலையில் முன்னேற்றம், தொழில் விரிவாக்க வாய்ப்புகள், மற்றும் வேலை தொடர்பான பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
மேஷம்: மேஷ ராசியின் 7-ஆம் வீட்டிற்குச் செல்லும் சுக்கிரன், நீண்டகால நிலுவை வேலைகளை வெற்றிகரமாக முடிக்க உதவும். பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்பிற்கான பலனும், நல்ல நிதி ஆதாயங்களும் கிடைக்கும். போட்டிகள் மற்றும் தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
விருச்சிகம்: விருச்சிக ராசியின் 12-ஆம் வீட்டிற்குச் செல்லும் சுக்கிரன், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் தரும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கலாம். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் வரும். தொழிலிலும், வியாபாரத்திலும் நல்ல லாபம் கிடைக்கும்.
மிதுனம்: மிதுன ராசியின் 5-ஆம் வீட்டிற்குச் செல்லும் சுக்கிரன், மாணவர்களுக்கு அற்புதமான காலத்தை உருவாக்கும். குடும்ப மகிழ்ச்சி, அன்பும் பிணைப்பும் அதிகரிக்கும். முதலீடுகளில் எதிர்பார்த்த லாபமும், எதிர்பாராத நிதி ஆதாயங்களும் கிடைக்கும். தொழிலில் இரட்டிப்பு லாபம் மற்றும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்.
