பிப்ரவரி சூரிய பெயர்ச்சி: 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் பெரிய முன்னேற்றம்!

ஜோதிடக் கணிப்புகளின்படி, கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தங்கள் நிலையை மாற்றுகின்றன. இந்த மாற்றங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. ஜோதிடத்தில் முக்கியமான கிரகமாக கருதப்படும் சூரியன், மாதத்திற்கு ஒருமுறை தனது ராசியை மாற்றுகிறார். இவர் சிம்ம ராசியின் அதிபதியாகவும் கருதப்படுகிறார்.

சூரியனின் ராசி மாற்றத்தில்தான் தமிழ் மாதங்கள் தொடங்குகின்றன. அதன்படி, பிப்ரவரி 13 ஆம் தேதி சூரியன் கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார். இதன் மூலம் மாசி மாதம் ஆரம்பமாகிறது. கும்ப ராசியின் அதிபதி சனி பகவான் ஆவார். சனி மற்றும் சூரியன் தந்தை-மகன் உறவாகக் கருதப்பட்டாலும், ஜோதிடத்தில் இவர்கள் பகை கிரகங்களாக பார்க்கப்படுகின்றனர்.

இதனால் இந்த சூரிய பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு தொழில் வளர்ச்சி, புதிய வேலை வாய்ப்பு மற்றும் வருமான உயர்வு போன்ற நல்ல பலன்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அவை எந்த ராசிகள் என்பதை பார்க்கலாம்.

துலாம்:

சூரியன் துலாம் ராசியின் ஐந்தாம் வீட்டிற்கு செல்லவுள்ளார். இதனால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கலாம்.

திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். காதல் உறவுகள் வலுப்பெறும். எதிர்பாராத பணவரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் பணியில் வளர்ச்சி காணலாம்.

மேஷம்:

சூரியன் மேஷ ராசியின் பதினொன்றாம் வீட்டிற்கு செல்கிறார். இதனால் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய வருமான வாய்ப்புகள் உருவாகலாம். பண வரவு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

பங்குச் சந்தை மற்றும் முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கலாம். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் சூழ்நிலை உருவாகும். பொருளாதார நிலை வலுப்படும்.

மகரம்:

சூரியன் மகர ராசியின் இரண்டாம் வீட்டிற்கு செல்கிறார். இதனால் பணியிடத்தில் திறமை வெளிப்படும். உங்களின் முயற்சிகள் பாராட்டைப் பெறும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக முடியும்.

பணவரவு அதிகரிக்கும். பேசும் திறன் மூலம் பல சாதனைகள் செய்யலாம். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். தொழில் வளர்ச்சிக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net