Connect with us
Tuesday, April 21, 2026

தை பொங்கல் 2026 ராசி பலன்கள்: தை பிறந்தால் யாருக்கு வழி திறக்கும், யாருக்கு அதிர்ஷ்டம்?

தை பொங்கல் 2026 ராசி பலன்கள்

“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற பழமொழிக்கேற்ற வகையில், 2026 ஆம் ஆண்டு தை மாதம் பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் புதிய திருப்பங்களை உருவாக்கப் போகிறது. ஜனவரி 15, 2026 அன்று தை முதல் நாள் பிறக்கிறது. இந்த தை மாதத்தில் சூரிய பகவான் சனி பகவானின் ஆட்சி வீடான மகர ராசியில் பயணம் செய்கிறார். சனியின் வீட்டில் சூரியன் பிரவேசிப்பதால், சிலருக்கு உயர்வு, சிலருக்கு வாழ்க்கை மாற்றம், சிலருக்கு பொறுமை சோதனை என கலவையான பலன்கள் அமையவிருக்கின்றன.

தை பொங்கல் நாளில் மகர ராசியில் சூரியன் மற்றும் சுக்கிரன், கும்ப ராசியில் ராகு, மீன ராசியில் சனி, மிதுன ராசியில் குரு, சிம்ம ராசியில் கேது, விருச்சிக ராசியில் சந்திரன், தனுசு ராசியில் செவ்வாய் மற்றும் புதன் என நவகிரகங்களின் முக்கியமான நிலைகள் உருவாகின்றன. இந்த கிரகச் சஞ்சாரம் மேஷம் முதல் மீனம் வரை உள்ள அனைத்து 12 ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு சூரியன் பத்தாம் வீட்டில் பயணம் செய்வதால் பதவி உயர்வு மற்றும் வேலைவாய்ப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வேலை தேடுபவர்களுக்கு கை நிறைய சம்பளம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. நிர்வாகத் திறன் வெளிப்படும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் கைக்கு வரும். புதிய தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணமும் நிறைவேறும். செவ்வாய்க்கிழமை முருகனை வழிபடுவது நன்மை தரும்.

சுக்கிரன் – சனி இணைப்பு: 3 ராசிக்காரர்களுக்கு செல்வமும் முன்னேற்றமும் தரும் முக்கிய காலம்சுக்கிரன் – சனி இணைப்பு: 3 ராசிக்காரர்களுக்கு செல்வமும் முன்னேற்றமும் தரும் முக்கிய காலம்

ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்களுக்கு ஒன்பதாம் வீட்டில் சூரியன் பயணம் செய்வதால் தை மாதம் பொற்காலமாக அமையும். புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மீகப் பயணங்களும் சாத்தியமாகும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு சிறப்பான பலனைத் தரும்.

மிதுன ராசி

மிதுன ராசிக்காரர்களுக்கு அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் பயணம் செய்வதால் எதிலும் கவனம் அவசியம். தை பிறந்த பின் உங்கள் சாமர்த்தியமான பேச்சு பல காரியங்களைச் சாதிக்க உதவும். கடன் பிரச்சனைகள் மெல்ல குறையும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். புதன்கிழமை துளசி மாலை அணிவித்து விஷ்ணுவை வழிபடுவது நல்லது.

கடக ராசி

கடக ராசிக்காரர்களுக்கு ஏழாம் வீட்டில் சூரியன் இருப்பதால் சவாலான பணிகளையும் எளிதாக முடிப்பீர்கள். வேலை இடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் தேவை. திங்கட்கிழமை சிவபெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.

சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம்… உங்கள் ராசி இதில் உள்ளதா?சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம்… உங்கள் ராசி இதில் உள்ளதா?

சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆறாம் வீட்டில் சூரியன் பயணம் செய்வதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அஷ்டம சனி காலம் நடப்பதால் பயணங்களில் நிதானம் அவசியம். இருப்பினும் அரசு சார்ந்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும். தினமும் அதிகாலையில் சூரிய வழிபாடு செய்வது நல்ல பலனைத் தரும்.

கன்னி ராசி

கன்னி ராசிக்காரர்களுக்கு தை மாதம் சாதகமான காலமாக அமைகிறது. ஐந்தாம் வீட்டில் சூரியன்–சுக்கிரன் சேர்க்கை இருப்பதால் பூர்வீக சொத்துகளால் லாபம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளின் திருமண பேச்சுவார்த்தைகள் சுபமாக முடியும். வெளிநாடு செல்லும் முயற்சிகளும் கைகூடும். சனிக்கிழமை பெருமாள் கோவிலில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது நன்மை தரும்.

துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்களுக்கு நான்காம் வீட்டில் சூரியன் பயணம் செய்வதால் மன குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வியாபார முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். நண்பர்களின் உதவி சரியான நேரத்தில் கிடைக்கும். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு செய்வது நல்லது.

ஜனவரி 02, 2026: இன்று அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிகள்! கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்ஜனவரி 02, 2026: இன்று அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிகள்! கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

விருச்சிக ராசி

விருச்சிக ராசிக்காரர்களுக்கு தை பிறந்தால் நிச்சயம் வழி பிறக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். முயற்சி ஸ்தானத்தில் ராஜ கிரகங்கள் இருப்பதால் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வேலை இடத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். செவ்வாய்க்கிழமை அங்காரக வழிபாடு வெற்றியைத் தரும்.

தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்களுக்கு குடும்ப ஸ்தானத்தில் கிரகங்களின் பயணம் இருப்பதால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் தடையின்றி நடைபெறும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருட்களை வாங்குவீர்கள். பூர்வீக சொத்துகளால் லாபம் கிடைக்கும். ஆன்மீகப் பயணங்கள் மன அமைதியைத் தரும். வியாழக்கிழமை குரு தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.

மகர ராசி

மகர ராசிக்காரர்களுக்கு இது அற்புதமான காலகட்டம். சூரியன் முழு மாதமும் உங்கள் ராசியில் பயணம் செய்வதால், கடந்த ஏழரை ஆண்டு கால சனித் தொல்லைகளில் இருந்து படிப்படியாக விடுபடுவீர்கள். ஏழரை சனியின் இறுதி கட்டம் என்பதால் கஷ்டங்கள் குறையும். கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவது சிறப்பு.

மார்ச் 4, 2026:  அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் ஈர்க்கும் 6 ராசிகள்! சீன ஜோதிடம் சொல்வது என்ன?மார்ச் 4, 2026: அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் ஈர்க்கும் 6 ராசிகள்! சீன ஜோதிடம் சொல்வது என்ன?

கும்ப ராசி

கும்ப ராசிக்காரர்களுக்கு விரைய ஸ்தானத்தில் சூரியன் மற்றும் சுக்கிரன் பயணம் செய்வதால் சுப செலவுகள் ஏற்படும். ஏழரை சனி காலம் நடப்பதால் அவசரம் தவிர்க்க வேண்டும். நிதானமான செயல்பாடுகள் வெற்றியைத் தரும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. சனிக்கிழமை சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது நன்மை தரும்.

மீன ராசி

மீன ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தானத்தில் சூரியன்–சுக்கிரன் இருப்பதால் திடீர் பண வருமானம் கிடைக்கும். இதுவரை தடைபட்டு வந்த சுப காரியங்கள் வேகமெடுக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். வியாழக்கிழமை சித்தர்கள் ஜீவ சமாதிக்கு சென்று வழிபடுவது சிறப்பான பலனைத் தரும்.

இந்த ராசி பலன்கள் பாரம்பரிய ஜோதிட நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. பலன்கள் நபருக்கு நபர் மாறுபடலாம். எந்த பரிகாரத்தையும் அல்லது ஜோதிட ஆலோசனையையும் மேற்கொள்வதற்கு முன் தகுதியான ஜோதிடரை அணுகுவது சிறந்தது.

டிசம்பர் 31, 2025: இந்த 6 சீன ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் நிதி வெற்றியும் காத்திருக்கிறது!டிசம்பர் 31, 2025: இந்த 6 சீன ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் நிதி வெற்றியும் காத்திருக்கிறது!

To Top