ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டி: இந்திய அணியில் 3 முக்கிய மாற்றங்கள் – கேப்டன் சூரியகுமார் அறிவிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதலாவது போட்டி பெர்த் நகரில் நடைபெற்றபோது, அந்தப் போட்டி மழை காரணமாகப் பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மெல்போர்ன் நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில், ஆஸ்திரேலிய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வீழ்த்தியது.

அதன் காரணமாக, 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் ஆஸ்திரேலியா அணியானது தற்போது ஒன்றுக்கு பூஜ்ஜியம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது இன்று ஹோபர்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே, இந்திய அணியால் இந்தத் தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்ய முடியும். இதன் காரணமாக, இந்திய அணி இந்தப் போட்டியில் வெற்றி பெறும் முனைப்போடு தற்போது விளையாடி வருகிறது.

சற்று முன்னர் போடப்பட்ட டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ், இந்திய அணி முதலில் பந்து வீசும் என்று அறிவித்தார்.

இந்திய அணியில் செய்யப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்:

மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில் மூன்று முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கேப்டன் சூரியகுமார் யாதவ் அறிவித்தார்.

1. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் வெளியேற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக ஜிதேஷ் சர்மா விளையாடுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

2. வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக அர்ஷ்தீப் சிங் அணிக்குள் இடம் பெற்றுள்ளார்.

3. மூன்றாவது மாற்றமாக, சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் வெளியேற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் அணியில் வந்துள்ளார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன்

1. அபிஷேக் சர்மா
2. சுப்மன் கில்
3. சூரியகுமார் யாதவ்
4. திலக் வர்மா
5. ஜிதேஷ் சர்மா
6. ஷிவம் துபே
7. அக்சர் படேல்
8. வாஷிங்க்டன் சுந்தர்
9. அர்ஷ்தீப் சிங்
10. வருண் சக்ரவர்த்தி
11. ஜஸ்ப்ரீத் பும்ரா

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net