இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் 162 ரன்களுக்கு ஆல் அவுட்

பகிர்
WhatsApp Google News Facebook Post Telegram

ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட்
படம்: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் 162 ரன்களுக்கு ஆல் அவுட்

அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியினர், இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், 44.1 ஓவர்களிலேயே 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானார்கள்.

வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக ஜஸ்டின் கிரீவ்ஸ் 32 ரன்கள் அடித்தார்.

இந்திய அணியின் பந்துவீச்சில் சிராஜ் 4 விக்கெட்டுகளும், பும்ரா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்

மூலம்: Colombo Tamil · திருத்தம் வேண்டுமா? எங்களுக்குத் தெரிவிக்கவும்