Friday, August 1, 2025
Homeசினிமாசிவகார்த்திகேயனின் ஹவுஸ் மேட்ஸ் மின்னலி பாடல் வெளியானது!

சிவகார்த்திகேயனின் ஹவுஸ் மேட்ஸ் மின்னலி பாடல் வெளியானது!

சிவகார்த்திகேயன் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில், நடிகர் தர்ஷன் நாயகனாக நடித்துள்ள படம் ’ஹவுஸ் மேட்ஸ்’. இந்தப் படத்தில் நடிகர் காளி வெங்கட் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படம் ஃபேண்டெசி கலந்த ஹாரர் காமெடி திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. எஸ். விஜயபிரகாஷ் தயாரிப்பில், ராஜேஷ் முருகேசன் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் வழங்குகிறது.

இந்த படத்தில், நடிகர்கள் அர்ஷா பைஜு, வினோதினி, தீனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘ஹவுஸ் மேட்ஸ்’ வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில், ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தின் மின்னலி பாடல் வெளியாகியுள்ளது.

RELATED ARTICLES

Most Popular