பிரிட்டனில் Boelo புயல் காரணமாக மரங்கள் விழுந்த சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஸ்கொட்லாந்தின் Castle Douglas அருகே 60 வயது நபரும், வடக்கு லண்டனில் காரின் மீது மரம் விழுந்ததில் 20 வயதுகளில் உள்ள இளைஞரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடும் காற்று மற்றும் மழையால் போக்குவரத்தும் மின்சார விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை மாலையில் சுமார் 90,000 வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை என மின்சார வலையமைப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
மீட்புப் பணிகள் நடைபெறும் நிலையில் மீண்டும் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மூலம்: Sky News