இன்று முதல் இந்த 4 ராசிகளின் வாழ்க்கையில் நடக்கும் மாற்றம் – தலைவிதியே மாறும்!

4 ராசிகளின் வாழ்க்கையில் நடக்கும் மாற்றம்

ஜோதிட ரீதியாக, முக்கிய கிரகங்களில் ஒன்றாக கேது பகவான் அறியப்படுகிறார். ராகுவுடன் இணைந்து கர்ம பலன்களை வழங்கும் நிழல் கிரகமாக கேது பார்க்கப்படுகிறார். ஆன்மீகம், ஞானம், திடீர் மாற்றங்கள் போன்றவற்றிற்கு கேது காரணமாக இருப்பதாக ஜோதிடம் குறிப்பிடுகிறது. கேது ஒரு ராசியில் 18 மாதங்கள் தங்குவார். 18 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சி அடைவார். கேதுவின் நிலை 12 ராசிகளுக்கும் நேர்மறையான மற்றும் எதிர்மறையான ஆற்றலை ஏற்படுத்தும். அந்த வகையில், கேது பகவானின் நட்சத்திர பெயர்ச்சி மே 29-ம் தேதி நடக்கிறது.

கேது பகவான் இன்று (மே 29) அன்று காலை 10.16 மணிக்கு மக நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் பெயர்ச்சி அடைகிறார். இந்த மக நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை இருப்பார். கேதுவின் இந்தப் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் செல்வமும் அள்ளிக் கொடுக்கும். அந்த ராசிகள் கன்னி, துலாம், மிதுனம், தனுசு ஆகிய நான்கு ராசிகளாகும்.

கன்னி ராசி

கன்னி ராசிக்காரர்களுக்கு கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டமும் செல்வமும் பெருகும். கேதுவின் அருளால் சுப பலன்களைப் பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களின் ஆதரவு இருக்கும். கேது மக நட்சத்திரத்தில் இருக்கும் வரை, கன்னி ராசிக்காரர்கள் வேலையில் நேர்மறையான ஆற்றலைப் பெறுவீர்கள். வேலை தொடர்பாக பல வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கும். நினைத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். உங்களுக்கு இருந்து வந்த சிறுசிறு பிரச்சினைகள் தீரும். பழைய கடன்கள் அடையும். இந்த நேரத்தில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். செலவுகள் குறையக் கூடும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு உண்டு.

துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்களுக்கு கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் நிதி நிலைமை மேம்படும். உங்களுக்கு இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். உடல் நலத்தில் முன்னேற்றம் இருக்கும். நாளை முதல் உங்களுக்குத் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கலாம். கேதுவின் பார்வையால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். நீண்ட காலமாகக் கிடப்பில் போடப்பட்டு இருந்த பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உதவி செய்வார்கள். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். வருமானம் உயரக் கூடும். பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். உங்கள் குடும்பப் பொறுப்புகளைச் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.

தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கை கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். உடன் பிறந்தவர்கள் உதவி செய்வார்கள். பணியிடத்தில் உங்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வருமானம் பெருகும். வேலையில்லாமல் இருப்பவர்கள் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். கடின உழைப்பிற்கு ஏற்ற பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் குடும்பத்தினருடன் இனிமையான நேரத்தைச் செலவிடுவீர்கள். நீங்கள் விரும்பிய பயணத்தை மேற்கொள்வீர்கள்.

மிதுன ராசி

மிதுன ராசிக்காரர்களுக்கு கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும். இந்தக் காலக்கட்டத்தில் உங்கள் உடல்நிலைமை மேம்படும். நாள்பட்ட நோயிலிருந்து குணமடையக் கூடும். திடீர் நிதி ஆதாயங்கள் ஏற்படும். நிதி நிலைமை மேம்படும். உங்கள் பணிச் சூழலில் நேர்மறையான மாற்றங்களைக் காணலாம். உறவுகள் மேம்படும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். உங்கள் குழந்தைகளிடமிருந்து நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் அடைவார்கள். வெளிநாடு செல்லும் கனவு நனவாகலாம். திருமணத் தடைகள் நீங்கும். விரைவில் நல்ல வரன் அமைய வாய்ப்புள்ளது. பொன், பொருள் சேரும். வீடு, வாகனம் வாங்கும் யோகமும் உங்களுக்கு இருக்கிறது.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. தகவல்களை வழங்குவது மட்டுமே இதன் நோக்கம்.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net