Connect with us
Tuesday, April 21, 2026

இறந்தவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட கருப்பை மூலம் பிறந்த முதல் குழந்தை

இறந்தவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட கருப்பை மூலம் பிறந்த முதல் குழந்தை

பிரித்தானியாவில் முதன்முறையாக, இறந்த கொடையாளரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட கருப்பையைப் பயன்படுத்தி, ஓர் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கென்ட் (Kent) பகுதியைச் சேர்ந்த கிரேஸ் பெல் (Grace Bell) மற்றும் அவரது கணவன் ஸ்டீவ் பாவெல் (Steve Powell) ஆகியோருக்கு இந்த ஆண் குழந்தை பிறந்துள்ளது. 10 வாரங்கள் ஆகும் குழந்தையை அவரது பெற்றோர் ஓர் “அதிசயம்” என்று அழைக்கிறார்கள்.

கிரேஸ் பெல், ‘எம்.ஆர்.கே.எச் சிண்ட்ரோம்’ (MRKH syndrome) என்ற பாதிப்புடன் பிறந்தவர். இதன்காரணமாக அவருக்கு பிறப்பிலேயே கருப்பை இல்லை, ஆனால், சினைப்பைகள் (ovaries) சாதாரணமாக இருந்தன. தமக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்று 16 வயதிலேயே அவருக்குக் கூறப்பட்டது.

2026 இல் அமலாகும் பிரித்தானிய குடிவரவு சீர்திருத்தங்கள்: விசா மற்றும் நிரந்தர குடியிருப்பில் புதிய கட்டுப்பாடுகள்2026 இல் அமலாகும் பிரித்தானிய குடிவரவு சீர்திருத்தங்கள்: விசா மற்றும் நிரந்தர குடியிருப்பில் புதிய கட்டுப்பாடுகள்

இந்நிலையில், ஜூன் 2024 இல் ஆக்ஸ்போர்டில் உள்ள சர்ச்சில் மருத்துவமனையில் 10 மணி நேர அறுவை சிகிச்சை மூலம் கிரேஸுக்கு கருப்பை மாற்றப்பட்டது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு, இலண்டனில் உள்ள லிஸ்டர் கருத்தரிப்பு மையத்தில் ஐவிஎஃப் (IVF) மற்றும் கருமுட்டை இடமாற்றம் (embryo transfer) மூலம் அவர் கருத்தரித்தார்.

2025 கிறிஸ்துமஸுக்குச் சற்று முன்னதாக, இலண்டனில் உள்ள குயின் சார்லோட் மற்றும் Chelsea இல் மருத்துவமனையில் சுமார் 7 பவுண்டு எடையில் குழந்தை பிறந்தது.

ஈரானை விட்டு வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அவசர அறிவிப்பு – தாக்குதல் அச்சத்தில் அதிகரிக்கும் பதற்றம்ஈரானை விட்டு வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அவசர அறிவிப்பு – தாக்குதல் அச்சத்தில் அதிகரிக்கும் பதற்றம்

இதுவே பிரித்தானியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இந்த ஆய்வின் ஒரு பகுதியாக 10 கருப்பை மாற்று அறுவை சிகிச்சைகள் திட்டமிடப்பட்டுள்ளன, அதில் இறந்த கொடையாளர் மூலம் நிகழ்ந்த முதல் பிறப்பு இதுவாகும். முன்னதாக, 2025 இன் தொடக்கத்தில் ‘ஏமி’ என்ற குழந்தை உயிருடன் இருந்த கொடையாளர் (சகோதரி) அளித்த கருப்பை மூலம் பிறந்திருந்தது.

தனது மகளுக்கு “வாழ்வின் மிகப்பெரிய பரிசை” வழங்கிய அந்த கொடையாளரையும் அவரது குடும்பத்தினரையும் கிரேஸ் நன்றியுடன் நினைவு கூர்கிறார். பெயரிடப்படாத அந்த கொடையாளர், தனது மரணத்திற்குப் பிறகு மேலும் நான்கு பேருக்கு ஐந்து உறுப்புகளைத் தானமாக அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் குழந்தை பிறப்பிக்க சுற்றுலா விசா பெற முடியாது – டிரம்ப் நிர்வாகம் அதிரடிஅமெரிக்காவில் குழந்தை பிறப்பிக்க சுற்றுலா விசா பெற முடியாது – டிரம்ப் நிர்வாகம் அதிரடி

கிரேஸ் தம்பதியினர் இரண்டாவது குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடிவு செய்தால், அதன் பிறகு அந்த மாற்று கருப்பை அவரது உடலில் இருந்து அகற்றப்படும். கிரேஸ் தனது வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஒடுக்கும் மருந்துகளை (strong drugs) உட்கொள்வதைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த மகத்தான சாதனையை நிகழ்த்திய மருத்துவக் குழுவின் தலைவரான பேராசிரியர் ரிச்சர்ட் ஸ்மித் அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக, தம்பதியினர் தங்கள் மகனுக்கு ‘ரிச்சர்ட்’ என்ற பெயரை நடுப்பெயராகச் சூட்டியுள்ளனர்.

கனடாவில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள்கனடாவில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள்

To Top