Connect with us
Tuesday, April 21, 2026

உலகக் கோப்பையை வெற்றிக்கொள்ள வேண்டும் என்றால் சுப்மன் கில்லை கழற்றிவிடுங்க… மனோஜ் திவாரி

2026 டி20 உலகக் கோப்பை

ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், வரும் பிப்ரவரி 7 முதல் இந்தியா மற்றும் இலங்கையில் இணைந்து நடைபெற உள்ளது. உலகின் முன்னணி 20 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில், சாம்பியன் பட்டத்தை தனது சொந்த மண்ணிலேயே மீண்டும் கைப்பற்ற இந்தியாவின் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.

இந்த நோக்கத்தை அடைய, ஓப்பனிங்கில் வலுவான தொடக்கம் அவசியம். அந்த பொறுப்பு தற்போது துணைக் கேப்டன் சுப்மன் கில் மீது உள்ளது. ஆனால், 2023ல் டி20 சர்வதேசத்தில் அறிமுகமான கில், அதன் பிறகு கடந்த 18 சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு அரைசதம்கூட பதிவு செய்யாமல், தொடர்ந்து மோசமான ஃபார்மில் சிக்கித் தவித்து வருகிறார்.

இந்த நிலையில், அவருக்குப் பதிலாக ஓப்பனிங்கில் அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர் – அபிஷேக் சர்மா முதல் எண் பேட்ஸ்மேனாக உயர்ந்து, சாதனைகளைப் படைத்தார். அதேபோல, சஞ்சு சாம்சன் மூன்று சதங்கள் அடித்து, ஓப்பனிங் இடத்தில் நிலையான இடத்தைப் பிடித்தார்.

பாகிஸ்தான் ஜாம்பாவனின் சாதனையை உடைத்த ரோஹித்! இனி எவரும் தொட முடியாத  ரெக்காட்பாகிஸ்தான் ஜாம்பாவனின் சாதனையை உடைத்த ரோஹித்! இனி எவரும் தொட முடியாத ரெக்காட்

எனினும், தேர்வுக்குழு சுப்மன் கில்லை “ஆல்-ஃபார்மட் கேப்டன்” ஆக வளர்க்க விரும்புவதால், அவரை டி20 அணியின் துணைத் தலைவராக நியமித்து, ஓப்பனிங்கில் விளையாட மீண்டும் வாய்ப்பளித்துள்ளது.

இந்நிலையில், முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் மனோஜ் திவாரி ஒரு முக்கியமான கருத்தை முன்வைத்துள்ளார். “இந்தியா உலகக் கோப்பையை வெல்ல விரும்பினால், சஞ்சு சாம்சன் போன்ற நிரூபிக்கப்பட்ட ஓப்பனர்களை தேர்வு செய்ய வேண்டும். ஒருவரின் எதிர்காலத் திட்டம் அல்லது பெயர் அல்ல, அவரது தற்போதைய செயல்திறன் மட்டுமே தேர்வுக்கு அடிப்படையாக இருக்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

திவாரி மேலும் கூறுகையில், “சஞ்சு சாம்சன் தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசத்துக்கு எதிராக அடுத்தடுத்த சதங்கள் அடித்துள்ளார். அதே நேரத்தில், கில் தொடர்ந்து தோல்வி காண்கிறார். கேப்டன்ஷிப்புக்கான திட்டம் எவ்வளவு நல்லதாக இருந்தாலும், முதலில் அவர் பேட்டிங்கில் நிரூபிக்க வேண்டும். கோப்பை வெல்லும் நோக்கத்தை விட்டுவிட்டு, நீண்டகால திட்டங்களை முன்னிலைப்படுத்தக் கூடாது,” என்றார்.

இந்தியா – ஆஸ்திரேலியா 3ஆவது டெஸ்ட் போட்டி சமநிலையில் நிறைவுஇந்தியா – ஆஸ்திரேலியா 3ஆவது டெஸ்ட் போட்டி சமநிலையில் நிறைவு

To Top