2026 ஐபிஎல் மினி ஏலம் இன்று அபுதாபியில் நடைபெறவுள்ளது. பத்து அணிகளும் வீரர்களை வாங்கத் தயாராக இருக்கும் நிலையில், பிசிசிஐ கடைசி நேரத்தில் அதிரடி மாற்றமாக 19 புதிய வீரர்களை ஏலப் பட்டியலில் சேர்த்துள்ளது. இதனால் ஏலத்தில் பங்கேற்கும் மொத்த வீரர்கள் எண்ணிக்கை 350-லிருந்து 369-ஆக உயர்ந்துள்ளது.
இந்த புதிய பட்டியலில் இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் அபிமன்யு ஈஸ்வரன். வங்காள அணியின் தொடக்க வீரராக இருந்த இவர், இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளவரும், சர்வதேச போட்டியில் இன்னும் அறிமுகம் கிடைக்கவில்லை. இவருக்கு ரூ.30 லட்சம் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டு, ஏதேனும் அணி இவரை வாங்குமா என்பதே இன்று நடைபெறவிருக்கும் ஏலத்தின் முக்கிய கணிப்பு.
புதிதாக சேர்க்கப்பட்ட வெளிநாட்டு வீரர்களில் முக்கியர்கள்: நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பென் சியர்ஸ் (அடிப்படை விலை ரூ.1.50 கோடி), தென்னாப்பிரிக்க ஆல்-ரவுண்டர் ஈதன் போஷ் (ரூ.75 லட்சம்), ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கிறிஸ் கிரீன் (ரூ.75 லட்சம்), தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் கைல் வெரைன் (ரூ.1.25 கோடி), ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் பிளெஸ்ஸிங் முசரபானி.
மொத்தமாக புதிதாக சேர்க்கப்பட்ட 19 வீரர்களும், அவர்களின் அடிப்படை விலையும்: மணிசங்கர் முராசிங் (30 லட்சம்), ஸ்வஸ்திக் சிகாரா (30 லட்சம்), ஈதன் போஷ் (75 லட்சம்), விரன்தீப் சிங் (30 லட்சம்), சாமா மிலிந்த் (30 லட்சம்), கே.எல்.ஸ்ரீஜித் (30 லட்சம்), ராகுல் ராஜ் நமலா (30 லட்சம்), கிறிஸ் கிரீன் (75 லட்சம்), விராட் சிங் (30 லட்சம்), அபிமன்யு ஈஸ்வரன் (30 லட்சம்), திரிபுரேஷ் சிங் (30 லட்சம்), கைல் வெரைன் (1.25 கோடி), பிளெஸ்ஸிங் முசரபானி (75 லட்சம்), பென் சியர்ஸ் (1.50 கோடி), ராஜேஷ் மொஹந்தி (30 லட்சம்), ஸ்வஸ்திக் சமால் (30 லட்சம்), சரண்ஷ் ஜெயின் (30 லட்சம்), சூரஜ் சங்கராஜு (30 லட்சம்), தன்மய் அகர்வால் (30 லட்சம்).
இன்று நடைபெறும் ஏலத்தில் 10 அணிகளும் மொத்தம் 77 இடங்களை நிரப்ப வேண்டியுள்ளது, இதில் 31 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்கானவை. குறிப்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அதிகபட்சமாக 13 இடங்களை நிரப்ப வேண்டும்.
கேமரூன் கிரீன், லியம் லிவிங்ஸ்டோன், ரவி பிஷ்னாய் போன்ற பிரபல தலைகளுக்குப் கடும் போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அபிமன்யு ஈஸ்வரன் போல புதிய திறமைகள் இந்த ஏலத்தில் ஜாக்பாட் அடிக்க வாய்ப்பு வாய்ப்புள்ளது.


