அமெரிக்காவில் குழந்தை பிறப்பிக்க சுற்றுலா விசா பெற முடியாது – டிரம்ப் நிர்வாகம் அதிரடி

அமெரிக்காவில் குழந்தை பிறப்பிக்க சுற்றுலா விசா பெற முடியாது – டிரம்ப் நிர்வாகம் அதிரடி

குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை பெறும் நோக்கில் அமெரிக்காவுக்கு பிரசவத்திற்காக வருவோருக்கு சுற்றுலா விசா வழங்கப்படமாட்டாது என்று டிரம்ப் நிர்வாகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் சிலர் குழந்தை பெற்றுப் பின் அந்த குழந்தைக்கு குடியுரிமை பெற முயற்சிப்பதாக நிர்வாகம் குற்றச்சாட்டு வெளியிட்டுள்ளது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

இந்தக் கட்டுப்பாட்டின் படி, குழந்தை பிறப்பிக்க அமெரிக்காவில் வருவதாக பிரதான நோக்கமாக இருந்தால், அதற்கு சுற்றுலா விசா மறுக்கப்படும்.
இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தங்களின் இணையதளத்தில் இதனை அறிவித்துள்ளது. விசா அதிகாரிகள், பயணத்தின் முதன்மை நோக்கம் குழந்தை பெற்றுக்கொள்வதாக இருந்தால், அந்த விண்ணப்பத்தை அனுமதிக்க முடியாது என்றும் அது உடனடியாக நிராகரிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

LATEST Post

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net