அமைச்சரவைக் கூட்டத்தில் டிரம்ப் தூங்கினாரா? இணையத்தில் வைரலான காணொளியால் விவாதம்!

டிரம்ப் தூங்கினாரா

அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், சமீபத்தில் நடைபெற்ற ஒரு அமைச்சரவைக் கூட்டத்தில் நீண்ட நேரம் கண்களை மூடியபடி இருந்த காட்சி கொண்ட காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சுமார் 90 நிமிடங்கள் நீடித்த இந்தக் கூட்டத்தில், டிரம்ப் ஒரு கட்டத்தில் தமது இருக்கையில் சாய்ந்து, கண்களை மூடியபடி இருப்பது தெளிவாகப் பதிவாகியுள்ளது. இதனைப் பார்த்த பலரும், “அவர் தூங்கினாரா? இல்லை, கண்களுக்கு ஓய்வு கொடுத்தாரா?” என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் நியூயார்க் டைம்ஸ் நாளேடு, டிரம்பின் அதிகப்படியான பணிச்சுமை, உடல்நலம் மற்றும் ஆற்றல் குறித்து ஒரு விரிவான கட்டுரையை வெளியிட்டது. அதற்குப் பதிலளித்த டிரம்ப், “எனது உடல்நலம் சிறப்பாகவும், ஆற்றல் உச்சத்திலும் உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

எனினும், அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் தூங்குவது போல தெரியும் காட்சிகள் வெளியான பிறகு, மீண்டும் அதிபரின் உடல் நலம் மற்றும் அவரது பணி திறன் குறித்து பொதுமக்கள் மத்தியில் விவாதம் எழுந்துள்ளது.

இந்த வீடியோ மூலம், வயது மற்றும் பதவியின் கடுமையான பணிச்சுமை குறித்து மீண்டும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன – குறிப்பாக, அமெரிக்காவின் மிக முதிர்ந்த வயதுடைய அதிபர்களில் ஒருவராக டிரம்ப் இருப்பதால், இந்த சம்பவம் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்துள்ளது.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net