சிங்கப்பூர்–மெக்சிகோ வணிக உறவு வலுப்படுகிறது: நிறுவனங்களுக்குப் புதிய வாய்ப்புகள்!

சிங்கப்பூர்–மெக்சிகோ வணிக உறவு

சிங்கப்பூர் நிறுவனங்கள் மெக்சிகோவில் தங்கள் தடம் பதிக்கவும், அங்குள்ள நிறுவனங்களுடன் கூட்டு முயற்சிகளில் ஈடுபடவும் கூடுதல் வாய்ப்புகளைப் பெறவிருக்கின்றன.

இதற்கான அடித்தளமாக, சிங்கப்பூர் வணிகச் சம்மேளனம் (Singapore Business Federation – SBF) மற்றும் மெக்சிகோவின் COMCE (Confederation of Mexican Employers) ஆகிய இரு முக்கிய வணிக அமைப்புகள் சமீபத்தில் ஒரு புதிய கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இந்த ஒப்பந்தம், புத்தாக்கத் தொழில்நுட்பத்துடன் கூடிய உற்பத்தி, நவீன வேளாண் பொருள்கள், நிதித் தொழில்நுட்பம் (FinTech) உள்ளிட்ட முக்கியத் துறைகளில் இரு நாடுகளுக்குமிடையே வணிக வாய்ப்புகளை ஆராயவும், வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும் நோக்கம் கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தம், இருதரப்பு வணிகத் தொடர்புகளை வலுப்படுத்துவதில் இரு அமைப்புகளின் உறுதியான கடப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.

சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் தர்மன் சண்முகரத்னம், சமீபத்தில் நடைபெற்ற மெக்சிகோ–சிங்கப்பூர் வணிகக் கருத்தரங்கில் கலந்துகொண்டு, இந்த ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்ழை வலியுறுத்தினார்.

அவர் பேசும்போது, “உலகளாவிய பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற சூழலில், நாம் புதிய வணிகத் தொடர்புகளை விரிவுபடுத்துவது மிகவும் அவசியமாகியுள்ளது” என்று கூறினார்.

இந்த முயற்சி, இரு நாடுகளும் உலகச் சந்தையில் நிலைத்தன்மையுடன் வளர்வதற்கான புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net