Connect with us
Monday, April 20, 2026

தென்னாப்பிரிக்கா தொடரில் 3 பெரும் சாதனைகளை நோக்கி ரோஹித் சர்மா – 20,000 ரன்கள், சிக்ஸர் சாதனை, 5000 சொந்த மண் ரன்கள்!

சாதனைகளை நோக்கி ரோஹித் சர்மா

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர துவக்க ஆட்டக்காரருமான ரோஹித் சர்மா, டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தொடர்ந்து விளையாடி வருகிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சமீபத்திய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதத்துடன் தொடர் நாயகன் விருதையும் வென்று அசத்தினார்.

தற்போது, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவர் மீண்டும் இந்திய அணியின் துவக்க வீரராக அணிக்குத் தலைமை தாங்க உள்ளார். அவரது ஆட்டத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், பி.சி.சி.ஐ அவரது செயல்பாட்டை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

பல தடவைகள் தோற்று அழுது இருக்கேன்.. இனி முடியாது… எப்படியாவது ஜெயிக்கணும் – இந்திய பெண்கள் அணி கேப்டன்பல தடவைகள் தோற்று அழுது இருக்கேன்.. இனி முடியாது… எப்படியாவது ஜெயிக்கணும் – இந்திய பெண்கள் அணி கேப்டன்

இந்தத் தொடரில் ரோஹித் சர்மா மூன்று முக்கிய சாதனைகளை நிகழ்த்த வாய்ப்புள்ளவராக உள்ளார்

 சாதனைகளை நோக்கி ரோஹித் சர்மா

20,000 சர்வதேச ரன்கள்

அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் (டெஸ்ட், ஒருநாள், டி20) இணைந்து 20,000 ரன்களை அடித்த நான்காவது இந்திய வீரராக வரலாறு படைப்பார். இதற்கு அவர் 98 ரன்கள் மட்டுமே தேவை. ஏற்கனவே சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் மட்டுமே இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

கம்பீர் முகத்தில் புன்னகையை பார்த்ததும் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தோம்: சூர்யகுமார் யாதவ்கம்பீர் முகத்தில் புன்னகையை பார்த்ததும் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தோம்: சூர்யகுமார் யாதவ்

ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள்

இந்தத் தொடரில் 3 சிக்ஸர்கள் அடித்தால், ஷாகித் அஃப்ரிடியின் (351 சிக்ஸர்கள்) சாதனையை முறியடித்து, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரராக முதலிடத்தைப் பிடிப்பார்.

சொந்த மண்ணில் 5000 ஒருநாள் ரன்கள்

அவர் 133 ரன்கள் குவித்தால், இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் போட்டிகளில் 5000 ரன்களை அடித்த மூன்றாவது இந்திய வீரராக சச்சின் மற்றும் கோலிக்கு அடுத்து இந்த பட்டியலில் இணைவார்.

இந்த மூன்று சாதனைகளும் ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கையில் மறுமுறை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்..  வெளியேறிய சூர்யகுமார் யாதவ்ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்.. வெளியேறிய சூர்யகுமார் யாதவ்

To Top